மாணவர் விடுதி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவை கலெக்டர் திடீர் விசிட்… உணவு, மருத்துவம் குறித்து ஆய்வு !!

Author: Babu Lakshmanan
7 July 2022, 9:14 am
Quick Share

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் சமீரன் ஆய்வு செய்தார்.

கோவை அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில் அரசின் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி மற்றும் ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் தங்கியிருந்து கல்லூரிகளுக்கு சென்று படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திடீரென்று கலெக்டர் சமீரன் மாணவர் நல விடுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இரவு நேர உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து விடுதியில் உள்ள மாணவர்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.

வார்டன் விடுதியில் தங்குகிறாரா, வாரந்தோறும் உணவுடன் முட்டை வழங்கப்படுகிறதா? புரத சத்து நிறைந்த உணவு வழங்கப்படுகிறதா? என்பது குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.

இதனைதொடர்ந்து, அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் சமீரன் ஆய்வு செய்தார். அப்போது பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிகள் உள்ளிட்டோரிடம் சிகிச்சைகள், டாக்டர்கள், நர்ஸ்கள் சரியாக பணிக்கு வருகிறார்களா என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும் அங்கு தங்கியிருந்து பணி புரியும் நர்ஸ்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.

Views: - 555

0

0