கோவைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா : எஸ்கேப்பான நபர்களை வலை வீசி தேடும் போலீசார்..!

Author: Babu Lakshmanan
30 April 2022, 7:29 pm

கோவை: பாட்னாவில் இருந்து கோவை வந்த ரயிலில் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி வந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

பாட்னாவில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று காலை கோவை வந்த ரயிலில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியில் உள்ள கழிவறை அருகே பொட்டலங்களாக 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதனைக் கடத்தி வந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை வழியாக வெவ்வேறு மாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளா செல்லும் ரயில்களில் தொடர்ந்து இதுபோன்று கஞ்சா கடத்தப்படுவதும், கடத்தல் காரர்கள் கஞ்சா பொட்டலங்களை பொது இடத்தில் வைத்துவிட்டு, வேறு இடத்தில் அமர்ந்து கொள்வதால் அதனை கடத்தி வந்தவர்களை போலீசார் கைது செய்வதில் சிக்கல் நீடிப்பதும் குறிப்பிடத்தக்கது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?