கோவையில் ஆண்புலி மர்மமான முறையில் உடல் சிதைந்து உயிரிழப்பு : வனத்துறை விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2021, 1:01 pm
Tiger Dead -Updatenews360
Quick Share

கோவை : சிறுமுகை அருகே உடல் சிதைந்த நிலையில் ஆண் புலியின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம் கூத்தாமுண்டி பகுதியில் நேற்று மாலை வனத்துறையினர் ரோந்து சென்றுள்ளனர். அப்போது, அங்கு உடல் சிதைந்த நிலையில், ஆண் புலி ஒன்று இறந்த கிடந்தது தெரியவந்தது.

ஆண் புலி உயிரிழப்புக்கான காரணம் தெரியாத நிலையில், இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இறந்த புலியின் உடலை தேசிய புலிகள் பாதுகாப்பு குழும விதிமுறைகளின் படி உடற்கூறாய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Views: - 160

0

0