காட்டு யானை தாக்கி மன நலம் பாதிக்கப்பட்டவர் பலி.! கோவை அருகே சோகம்.!!

2 August 2020, 12:41 pm
Elephant Attack Dead - Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் அருகே காட்டு யானை தாக்கி மனநலம் பாதிக்கப்பட்டவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள கோத்தகிரி செல்லும் சாலையில் செல்லும் சாலையில் 3 ஆம் வளைவு அருகே இன்று காலை 45 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் சிதைந்த நிலையில் கிடப்பதாக சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்து அறிந்த வனத்துறையினர வி்ரைந்து வந்து சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

வனத்துறையினரின் விசாரணையில் காட்டு யானையால் தாக்கப்பட்டு சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபரின் உடல் சிதைந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும்,இறந்த நபர் மனநிலை சரியில்லாதவர் என்பதும், தனியாக இரவு நேரத்தில் சாலையில் நடந்து வரும் போது சம்பவம் நடந்துள்ளது என்பதும் வனத்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து சிறுமுகை வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும்,இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 0

0

0