குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோகம்… வெற்றிக்கான ரகசியம் இதுதான் ; பூரிப்பில் வானதி சீனிவாசன் கொடுத்த விளக்கம்!!

Author: Babu Lakshmanan
8 December 2022, 12:32 pm
Quick Share

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெறக் காரணம் என்ன..? என்பதை கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விளக்கியுள்ளார்.

குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 64.33 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இங்கு வழக்கமாக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே தான் போட்டி இருக்கும். இந்த முறை, டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆளுங்கட்சியாக உள்ள ஆம் ஆத்மியும் களமிறங்கியது. இதனால் மும்முனை போட்டி ஏற்பட்டது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், பா.ஜ.க.வுக்கு சாதகமாகவே உள்ளன. இந்த நிலையில், ஓட்டுகளை எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடை பெற்று வருகிறது. இந்த ஓட்டு எண்ணிக்கையில் அதிக இடங்களை பாஜக பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்து பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

கட்லோடியா தொகுதியில் போட்டியிட்ட குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் 58,529 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதேபோல, ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா முன்னிலை வகித்துள்ளார். தற்போது வரை அவர் 14,905 வாக்குகள் பெற்றுள்ளார்

தற்போது, குஜராத்தில் 154 தொகுதிகளில் பாஜகவும், 16 தொகுதிகளில் காங்கிரசும், 9 தொகுதிகளில் ஆம்ஆத்மியும் முன்னிலை பெற்றுள்ளன. இதன்மூலம் அரிதி பெரும்பான்மையுடன் பாஜக 7வது முறையாக குஜராத்தில் ஆட்சியமைக்க உள்ளது. இதனை தொண்டர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெறக் காரணம் என்ன..? என்பதை கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விளக்கியுள்ளார்.

Vanathi - Updatenews360

இது தொடர்பாக அவர் கூறியதாவது :- குஜராத் மாநிலம் எந்தளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. வளர்ச்சி, முன்னேற்றத்தை தொடர்ச்சியாக 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு கட்சியால் வழங்க முடியும் என்பதை பா.ஜ.க நிரூபித்து காட்டியிருக்கிறது, என்றார்.

Views: - 164

0

0