எஸ்.பி.பி பாடிய பாடலை பாடி கோவை இசைக்கலைஞர்கள் இசையஞ்சலி !!

26 September 2020, 1:11 pm
SPB Music TRibute- updatenews360
Quick Share

கோவை: பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உயிரிழந்ததை தொடர்ந்து கோவையைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் அவருக்கு இன்று இசை அஞ்சலி செலுத்தினர்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சூழலில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், கோவையை சேர்ந்த ராஜ் மெலடிஸ் இசைக்குழுவினர் எஸ்.பி.பாலசுப்பிரமணி அதற்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பிரபல பாடல்களை இசைக்குழுவினர் பாடி அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக பாலசுப்பிரமணியத்தின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.