சுதந்திர தினத்தில் 500 மரக்கன்றுகள் நடவு செய்த தேசிய மாணவர் படை.!!

15 August 2020, 1:17 pm
Cbe NSS - Updatenews360
Quick Share

கோவை : நாட்டின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை சூலூர் அருகே உள்ள கிராமத்தில் தேசிய மாணவர் படை சார்பில் 500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

தேசிய மாணவர் படையின் தமிழ்நாடு நான்காவது படைப்பிரிவு சார்பில் கோவை சூலூர் அடுத்த பீடம்பள்ளி மற்றும் நடுப்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தத்தெடுக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட பணிகள் தேசிய மாணவர் படை சார்பில் அக்கிராமங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தேசிய மாணவர் படை சார்பில் நாட்டின் 74 வது சுதந்திர தின விழா பீடம்பள்ளி பகுதியில் கொண்டாடப்பட்டது. இதையடுத்து அங்குள்ள திருக்கோவிலுக்கு சொந்தமான சுமார் பத்து ஏக்கர் நிலத்தை தூய்மை படுத்திய தேசிய மாணவர் படை மாணவ மாணவிகள் அங்கு தேசிய கொடியேற்றியதுடன் சுமார் 500 மரக்கன்றுகளையும் நடவு செய்தனர்.

மேலும் அப்பகுதியை சேர்ந்த நூறு ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை வழங்கினர். மேலும், ஆத்ம நிர் பாரதா குறித்தும், ‘பிட்’ இந்தியா மூவ்மெண்ட் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் கொரோனா தொற்று குறித்து தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு குரும்படத்தையும் ஒளிபரப்பினர்.

இந்த நிகழ்ச்சியில் லெஃப்டினண்ட் கர்னல் பரத்,பீடம்பள்ளி பஞ்சாயத்து தலைவர் குமரவேல் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 44

0

0