உலகத்தரம் வாய்ந்த அரங்கமாக கோவை நேரு ஸ்டேடியம் மாற்றப்படும் : விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் உறுதி!!

2 July 2021, 6:42 pm
Nehru Stadium - Updatenews360
Quick Share

கோவை : நேரு விளையாட்டு அரங்கம் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள ஹாக்கி மைதானம் மற்றும் நேரு விளையாட்டு அரங்கத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை அளிப்பதுடன் அவர்களது திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக செயலாற்றி வருகிறார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டபட்டு கட்டிமுடிக்கபட்டு 47 ஆண்டுகள் ஆகும் இந்த நேரு ஸ்டேடியம் கடந்த 10 ஆண்டுகளில் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

இது தொடர்பாக முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று நேரு விளையாட்டு அரங்கம் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கோவையில் கிரிக்கேட் ஸ்டேடியம் அமைப்பது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

Views: - 166

0

0