சாயப்பட்டறை கழிவுகளால் நுரை பொங்கும் நொய்யல்… சுண்ணாம்பு கால்வாய் அணைக்கட்டை மீட்டெடுக்கக் கோரிக்கை..!!

Author: Babu Lakshmanan
16 May 2024, 7:32 pm

கோவை சுண்ணாம்பு கால்வாய் அணைக்கட்டில் சாயப்பட்டறை கழிவுகளால் சாய நுரைகள் ஏற்பட்டிருப்பது பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் வழியாக காவிரியாற்றில் கலக்கிறது. இந்த ஆறு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆறு வருகின்ற வழித்தடமான சுண்ணாம்பு கால்வாய் அணைக்கட்டு பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளால் அடிக்கடி இந்த ஆற்றில் மாசு ஏற்படுகிறது.

மேலும் படிக்க: ஒரு சராசரி மனைவி போல தான் நானும்… மீடியாவின் துணை மட்டும் தான் எனக்கு இருக்கு ; கண்ணீர் விடும் பெலிக்ஸின் மனைவி..!!!

இந்நிலையில், கோவையில் கடந்த சில தினங்களாக கோவையில் பரவலாக மழை பெய்து வருவதால் அப்பகுதியில் இருந்து வெளியேறும் சாயப்பட்டறை கழிவுகள் ஆற்றின் மீது நுரை படலாமா படர்ந்தது. அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்வதாகவும் இதனை தடுப்பதற்கு கோவை மாநகராட்சி நிர்வாகமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!