கஞ்சா வைத்திருந்த 19 வயது வாலிபர் கைது : கோவை போலீசார் அதிரடி!!

16 November 2020, 2:41 pm
Ganja Youth Arrest- Updatenews360
Quick Share

கோவை : கோவையில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு கிலோ 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் மலுமச்சம்பட்டியை அடுத்து அன்பு நகர் பகுதியில் உள்ள முருகவேல் (வயது 19) என்ற வாலிபரிடம் போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவரிடம் ஒரு கிலோ 200 கிராம் எடையை கொண்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 42

0

0