பிரபல ரவுடிகளை பெங்களூரில் ஓட ஓட விரட்டி பிடித்த கோவை போலீசார் : உயிருக்கு பயந்து வீடியோ வெளியிட்ட ரவுடி!!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2023, 12:27 pm

கோவையில் நீதிமன்ற வளாகம் பின்புறம் நடைபெற்ற கொலை சம்பவத்தை தொடர்ந்து ரவுடிகளுக்கு எதிராக தீவிர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

Anti Rowdy Drive என்ற பெயரில் 80க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.Praga Brothers மற்றும் Rathinapuri Bloods ஆகிய பெயரில் இரண்டு குழுக்கள் பகையை வளர்த்து வந்தது தெரிய வந்தது.

Praga Brothers என்ற குழுவைச் சேர்ந்த கௌதம் என்பவர் தன்னை காவல்துறையினர் encounter செய்யபோவதாக கூறி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கௌதமின் கூட்டாளிகள் தலைமறைவாகினர். இவர்களை பிடிக்க பெங்களுரு சென்ற தனிப்படை மக்கள் நடமாட்டம் மிக்க பகுதிகளில் நேற்று 4 ரவுடிகளை விரட்டி பிடித்தனர்.

சுஜி மோகன், பிரசாந்த், அமர், பிரவீன் ஆகிய 4 பேரை கைது தனிப்படை கைது செய்தனர்.போலீசார் துரத்திய போது தப்பிஓடிய அமர் என்ற ரவுடி, காவல்துறை விரட்டுவதாகவும் என் கை கால்கள் நன்றாக உள்ளது, என்னை விரட்டுகிறார்கள் என்று கூறி வீடியோ வெளியிட்டு உள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!