பல்வேறு இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது..

6 December 2019, 4:12 pm
coimbatore police byte _UpdateNews360
Quick Share

கோவை : பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என ரயில்வே காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் பேசுகையில் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்தாண்டில் சுமார் 800 பேர் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர் எனவும், ரயில் மோதி உயிரிழப்போர் எண்ணிக்கை சென்னையில் அதிகமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

ரயில் மோதி உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்விபத்துகளுக்கு விழிப்புணர்வு இல்லாததே காரணம் எனவும் அவர் தெரிவித்தார். விதிமீறி ரயில் பாதைகளை கடப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆபத்தான இடங்களில் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். சிறிய ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பெண்கள் பாதுகாப்பிற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் ரயில் பாதைகளில் மது அருந்துவதை தடுக்க, ரயில் பாதைகளுக்கு அருகேயுள்ள மதுக்கடைகளை கண்டறிந்து அவற்றை இடமாற்ற கோரி மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுத உள்ளதாக கூறிய அவர் ரயில்வே காவல் துறையில் 20 சதவீதம் காவலர்கள் பற்றாக்குறை உள்ளதாக தெரிவித்தார்.