பிஎஸ்ஜி கல்லூரி மாணவன் ராகிங் விவகாரம் ; 7 மாணவர்களுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம்!!

Author: Babu Lakshmanan
17 November 2023, 11:11 am

கோவை பி.எஸ்.ஜி கல்லூரி ராகிங் விவகாரத்தில் 7 மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த நவம்பர் 6ம் தேதி கோவை பீளமேடு பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் திருப்பூர் ராயர்பாளையத்தை சேர்ந்த மாணவனை, அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் மொட்டை அடித்து ராகிங் செய்தனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர் கொடுத்த புகாரில் அதே கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கும் சந்தோஷ், யாலிஷ், தரணிதரன், ஐயப்பன், நித்தியானந்தன், மணி, தில்பர் மற்றும் வெங்கடேஷ் ஆகிய 8 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வெங்கடேஷ் தவிர மற்ற ஏழு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் 7 பேரும் பிணை கேட்டு கோவை 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 7 மாணவர்களுக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதாவது, 7 மாணவர்களும் அவரவர் ஊர்களில் உள்ள காவல் நிலையத்தில் 30 நாட்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

தலைமுறைவாக உள்ள மாணவர் வெங்கடேஷை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

  • I would rather not get married.. 37-year-old Simbu's heroine open திருமணம் செய்யாமல் இருக்கவே விரும்புகிறேன்.. 37 வயதாகும் சிம்பு பட நாயகி ஓபன் டாக்!