கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு தெரியுமா?

3 November 2020, 10:44 am
chennai rain 4 - updatenews360
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. அதன்படி மொத்தமாக 300 மில்லி மீட்டர் மழை நேற்று ஒரே நாளில் பதிவாகியுள்ளது.

கோவையின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவு விவரம் பின்வருமாறு:

அன்னூர் பகுதியில் 12 மில்லி மீட்டர் மழை, கோவை விமான நிலைய சுற்றுவட்டார பகுதிகளில் 27.1 மில்லி மீட்டர் மழை, மேட்டுப்பாளையம் பகுதியில் 74 மில்லி மீட்டர் மழை, வால்பாறையை அடுத்த சின்கோனா பகுதியில் 47 மில்லி மீட்டர் மழை, சின்னக்கல்லார் பகுதியில் 6 மில்லி மீட்டர் மழை, வால்பாறை பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் பகுதிகளில் 9 மில்லி மீட்டர் மழை, வால்பாறை தாலுகா பகுதியில் 8 மில்லி மீட்டர் மழை, ஆழியார் பகுதியில் 8.6 மீட்டர் மழை, சூலூரில் 24 மில்லி மீட்டர் மழை, பொள்ளாச்சி பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை, கோவை தெற்கு பகுதிகளில் 33 மில்லி மீட்டர் மழை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் 42.4 மில்லி மீட்டர் மழை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வட்டாரங்களில் 5.5 மில்லி மீட்டர் மழை என மொத்தம் 300.6 மில்லி மீட்டர் மழை நேற்று ஒரே நாளில் பதிவாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் சராசரி அளவாக 21. 47 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 21

0

0