கோவையில் அரை நிர்வாண கோலத்தில் சுற்றும் கொள்ளையர்கள்.! களவாணிகளின் சி.சி.டி.வி காட்சிகள்.!!
7 August 2020, 3:13 pmகோவை : கோவையில் அரை நிர்வாண கோலத்தில் கொள்ளையர்கள் வீடு புகுந்து திருட முயற்சித்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் கோவை பீளமேடு பகுதியில் அரைநிர்வாண கோலத்தில் கொள்ளையர்கள் வீதிகளில் உலா வந்தனர். மேலும் ஒரு வீட்டின் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். கொள்ளையர்களை கண்டுபிடிக்க கோவை மாநகர காவல்துறையினர் தனிப்படை அமைத்துள்ளனர்.
இந்த சூழலில், கோவை இருகூர் அருகே உள்ள வீட்டின் மதில் சுவர் மேல் ஏறி உள்ளே குதித்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கூச்சலிட்டதால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதேபோல, சிங்காநல்லூர் பகுதியில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.