கோவை டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மதுவிற்பனை… டிரான்ஸ்போர்ட் செலவு என சமாளித்த விற்பனையாளர் ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
16 December 2023, 5:06 pm

கோவை, காந்திபுரம் அரசு டாஸ்மாக் கடையில், மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததால் பரபரப்பு நிலவியது.

கோவை – காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடை எண், 1616 கடையில், மது பாட்டில் வாங்க வந்துவரிடம் கூடுதல் விலைக்கு விற்றதால் பரபரப்பு ஆனது. மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பதாக, மது பிரியர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது :- மூன்று ஃபுல் பாட்டில்கள் வாங்கிய மது பிரியரிடம் ஒரு ஃபுல் பாட்டில் MRP 840 ஸ்டிக்கர் 10 மொத்தம் 850. ஆனால் நீங்கள் பாட்டிலுக்கு 20 அதிக விலை வைத்து 870 ரூபாய் கேட்டால் என அர்த்தம், என்று கேள்வி எழுப்பினார்.

https://player.vimeo.com/video/895259755?badge=0&autopause=0&player_id=0&app_id=58479

அதற்கு டிரான்ஸ்போர்ட் செலவு என சொல்லி, மது பாட்டில் வாங்க வந்தவரை துரத்தி விட்ட வீடியோ வால் சமூக வலைதளங்களில் பரப்பாக பேசப்படுகிறது. கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?