ரெண்டு பக்கமும் செக்யூரிட்டி… ‘கொஞ்சி விளையாடும் குட்டி யானைகள்’… சாலையில் முகாமிட்ட கூட்டம் ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
23 June 2023, 12:56 pm
Quick Share

கோவை ; கோவையில் சாலையில் முகாமிட்டு உள்ள யானை கூட்டங்களில், இரு குட்டியானைகள் விளையாடும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் ஆனைகட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம், மருதமலை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகிறது.

மருதமலைக்கு செல்லும் பக்தர்கள் மலைப் பாதையில் நடந்து செல்ல மாலை 5 மணிக்கு மேல் அனுமதி இல்லை. அதேபோன்று இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் தான் அனுமதி.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மருதமலை அடிவாரம் ஐஓபி காலனி பகுதியில் யானை தாக்கி குமார் என்பவர் உயிரிழந்த நிலையில், வனத்துறையினர் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

மேலும், வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் யானை நடமாடும் பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி யானை நடமாடும் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மருதமலை சாலையில் உள்ள ஐ.ஓ.பி காலனி பகுதியில் இரவு யானை கூட்டம் சாலையோரம் முகாமிட்டிருந்த நிலையில், சுற்றி யானைகள் இரண்டு சாலையின் நடுவே விளையாடிக் கொண்டு இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Views: - 2501

0

0