திடீரென வீசிய துர்நாற்றம்… குடிசைக்குள் சென்று பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி ; கோவையில் அரங்கேறிய கொடூரம்!

Author: Babu Lakshmanan
9 May 2023, 9:05 am

கோவை ; கோவையில் தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை காந்திபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் தகரம், தென்னங்கீற்றுகளால் கட்டப்பட்ட கூரைவீடு ஒன்று உள்ளது. இந்நிலையில் அங்கிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு ஒரு பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் கிடப்பது தெரியவந்தது.

உடனடியாக இதுகுறித்து காட்டூர் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் சந்தேக மரணத்தின் அடிப்படையில் இறந்த பெண் யார்? எவ்வாறு இறந்தார் என விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

பிரேத பரிசோதனையின் அடிப்படையிலேயே அது கொலையா? வேறு ஏதேனும் காரணங்களா? என தெரியவரக் கூடும். இச்சம்பவம் கோவையில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?