குளிக்க சென்று காப்புக்காட்டில் சிக்கிய இளைஞர்கள் : அத்துமீறியதால் அபராதம் விதித்த வனத்துறை!!

Author: Udayachandran
15 October 2020, 4:57 pm
forest - Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் அருகே கண்டியூர் காப்புக் காட்டில் அத்துமீறி நுழைந்த இளைஞர்களுக்கு அபாரதம் விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

கோவை மேட்டுப்பாளையம் வட்டம், நெல்லித்துறை கிராமம், விளாமரத்தூர் அருகில், பவானி ஆற்றில் கோவை முல்லை நகர் பகுதியை சேர்ந்த அகிலன்(வயது 24) அதே பகுதியை சேர்ந்த சிவசங்கரன் என்பவர்கள் மகன் ஜெயவிஷ்ணு (வயது 22) அண்ணாநகர் பகுதியை சேர்ந்த தயாநிதி (வயது 25) மசக்காளிபாளையம் பகுதியை சேர்ந்த நாகார்ஜுன்(வயது 23) ஆகிய நான்கு இளைஞர்கள், பாவனி ஆற்றுக்கு குளிக்கச் சென்றனர்.

ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், மறுகரையில் உள்ள கண்டியூர் காப்புக் காட்டுக்குள் சென்றுள்ளனர்.
இரவு முழுவதும் கண்டியூர் காப்புக் காட்டுக்குள், சுள்ளி விறகு பொறுக்கி, நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து கொண்டு இருந்தவர்களை, இன்று காலை ரோந்து சென்ற, வனச்சரகர்கள் பார்த்துள்ளனர்.

இதையடுத்து இளைஞர்கள் நால்வரையும், மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் விசாரணை செய்து, கோவை வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் அவர்களது உத்தரவின்படி, இளைஞர்ளுக்கு தலா ரூ.3000 வீதம் மொத்தம் ரூ.12,000 அபராதமாக விதிக்கப்பட்டது.

Views: - 52

0

0