கோவையில் குடிபோதையில் வந்த இளைஞரிடம் குடிக்க பணம் கேட்ட கும்பல் : தர மறுத்ததால் கொலை!!

27 November 2020, 12:17 pm
cbe Murder - Updatenews360
Quick Share

கோவை : மது குடிக்க பணம் தராத காரணத்தால் கோவையில் வாலிபர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 24). இவர் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு விக்னேஷ் கோவை விமான நிலையத்தை அடுத்த பிருந்தாவன் நகர் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார்.

தொடர்ந்து அவ்வழியாக நடந்து சென்ற போது அவரை வழிமறித்த 4 பேர் அடங்கிய கும்பல் குடிக்கப் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதற்கு விக்னேஷ் பணம் தர மறுத்துள்ளார். இந்த நிலையில் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் அந்த 4 பேரும் விக்னேஷ் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு அவரது செல்போனை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். சத்தம்கேட்டு அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து விக்னேசை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.

Views: - 18

0

0