நண்பருடன் சென்ற வாலிபர் கத்தியால் குத்திக்கொலை.. நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ; போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
18 April 2023, 8:19 am

கோவையில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை குனியமுத்தூர் ஜீவாநகரை சேர்ந்தவா் ரகுமத்துல்லா (வயது 25). இவர் தனது நண்பர் ஒருவருடன் செல்வபுரம் தில்லை நகருக்கு சென்றார். அப்போது நள்ளிரவு 11.30 மணியளவில் அங்கு வந்த ஆசாமிகள் சிலர் திடீரென ரகுமத்துல்லாவை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் கத்திக்குத்து பட்டதில் உடலில் ரத்தக்காயத்துடன் ரகுமத்துல்லா உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ரகுமத்துல்லாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. மேலும், கொலை நடந்த இடம் டாஸ்மாக் மதுக்கடை அருகே என்பது தெரிய வந்தது.

இதனால் மது போதையில் யாராவது கத்தியால் குத்திக்கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக கொலை நடந்ததா என்பது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Actor Ajith admitted to Apollo Hospital அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி… உடல்நிலைக்கு என்னாச்சு?