25 நாட்களுக்கு பின் அலுவலகம் திரும்பிய ஆட்சியர்.!

10 August 2020, 11:42 am
Cbe Collector Returns - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் பூரண குணமடைந்து இன்று அலுவலகம் திரும்பினார்.

கோவை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரம் முதல் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் போர்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கோவை மாவட்ட ஆட்சியராக உள்ள ராசாமணியின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் இருந்து வருகிறது.

தினமும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனை, கட்டுப்பாட்டு மண்டலங்களை நேரில் சென்று பார்வையிடுதல், கொரோனா வைரசை கட்டுப்பட்டு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மதிக்காதவர்கள் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டு வந்தார்.

இந்த சூழலில், கடந்த மாதம் 15ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியானது. இதனை தொடர்ந்து ஆட்சியர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார். இருந்தபோதிலும் மருத்துவர்கள் அவரை தனிமையில் இருக்க அறிவுறுத்தினர்.

இதனை தொடர்ந்து அவர் தன்னைத் தானே வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.இந்த நிலையில் தொற்றில் இருந்து முழுமையாக குணம் அடைந்து இன்று பணிக்கு திரும்பியுள்ளார். சுமார் 25 நாட்களுக்கு பிறகு ஆட்சியர் ராசாமணி அவரது அலுவலகத்திற்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது

Views: - 5

0

0