ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவி கடத்தல் ; ராமேஸ்வரத்திற்கு பறந்த கோவை போலீசார்… கார் ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது..!

Author: Babu Lakshmanan
13 March 2023, 8:16 pm

கோவை : கோவையில் கல்லூரி மாணவியை கடத்தி சென்ற கார் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்த 17 வயது மாணவி கோவை கோவில்பாளையத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கல்லூரியில் இருந்து வெளியே சென்ற மாணவி கல்லூரிக்கு திரும்பாததால் மாணவியின் பெற்றோர் கோவில்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் மாணவியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில் இறுதியாக மாணவிடம் பேசியது சாத்தூரை சேர்ந்த டிரைவர் ஞான பிரகாசம் என்பதும், அவர்கள் இருவரும் ராமேஸ்வரம் பகுதியில் இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து ராமேஸ்வரம் சென்ற கோவில்பாளையம் காவல்துறையினர் மாணவியை மீட்டதுடன் டிரைவர் ஞான பிரகாசத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!