பேருந்து நிறுத்தத்தில் குடுமிப்பிடி சண்டை போட்ட மாணவிகள்… தலைநகர் சென்னையில் அதிர்ச்சி… வைரலாகும் ஷாக் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
26 April 2022, 8:28 pm
Quick Share

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கல்லூரி மாணவிகளிடையே குடுமிச்சண்டை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வடசென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள அரசு கலை அறிவியல் மற்றும் தொழிற்கல்வி கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள், கல்லூரி முடித்துவிட்டு பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்துகொண்டிருந்தனர். அப்போது இரு தரப்பு மாணவிகளுக்கிடையே பேருந்து நிறுத்தத்திலேயே வாய்தகராறு ஏற்பட்டு குடுமிச்சண்டையில் ஈடு்பட்டுள்ளனர்.

அங்கிருந்த சக கல்லூரி மாணவ, மாணவிகள் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர். கல்லூரி வளாகத்தினுள் ஏற்பட்ட வாய்தகராறு பேருந்து நிறுத்தத்தில் குடுமி சண்டையாக மாறியுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், மாணவிகளின் எதிர்காலம் குறித்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

இதனால் புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 614

0

0