வசூல் வேட்டையில் வேளாண் பல்கலை., பராமரிப்பு இல்லாத பூங்காவில் புகைப்படம் எடுக்க பல மடங்கு கட்டணம் உயர்வு : ஷாக்கில் புதுமணத் தம்பதிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 December 2022, 10:19 am

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள பொட்டானிக்கல் பூங்காவில் தாவரங்கள், பூக்கள் அதிக அளவில் பயிரிட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கோவையில் உள்ள புகைப்பட கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் புதுமண தம்பதிகளை அழைத்துச் சென்று அங்கு அவர்களை இயற்கை எழிலோடும், மலர்களோடும் பல வண்ண வகையில் புகைப்படங்களை மற்றும் வீடியோ எடுப்பது வழக்கம்.

இந்நிலையில் இது நாள் வரை புகைப்படத்திற்கு 100 ரூபாய் வசூலித்த நிலையில் தற்போது 500 ரூபாய் வசூலிப்பதாகவும், வீடியோ ஒளிப்பதிவு செய்வதற்கு 500 ரூபாய் வாங்கி வந்த நிலையில் தற்போது 2000 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக ஒளிப்பதிவாளர்கள், புதுமண தம்பதிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

மேலும் பொட்டானிக்கல் பூங்கா பராமரிப்பு இல்லாமல் இருப்பதாலும் அதிக கட்டணம் வசூல் செய்வதாலும் மக்களின் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதேபோன்று கோவை வளாகுளத்தில் படகு சவாரி சுற்றுலா பயணிகள், பொதுமக்களை கவரும் வகையில் துவங்கப்பட்டு உள்ளது. கோவை மாநகரில் மக்களின் பொழுதை போக்க குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்றவாறு இடங்கள் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மாநகரில் சுற்றியுள்ள குளங்களை தூர்வாரி அதில் படகு சவாரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அங்கு படகு சவாரி செய்ய கட்டணம் அதிகப்படியாக வசூலிப்பதாகவும், உணவு பொருட்கள் விற்பனையும் அதிக செலவு ஆகிறது என்றும் பொதுமக்கள் வேதனை அடைந்து உள்ளனர்.

பொதுமக்களில் மன அமைதியை உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்கும் விதமாக உருவாக்கப்பட்ட பொது இடங்கள் தற்பொழுது அதிக கட்டணம் வசூலிக்கும் இடங்களாக மாறி வருவது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!