காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தற்கொலை !
31 August 2020, 2:55 pmபுதுச்சேரி : வீராம்பட்டினம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீராம்பட்டினம் அப்துல் கலாம் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 48). இவர் கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் தேவிகா (வயது 20) கிருமாம்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் லேப் டெக்னீசியன் படித்து வருகிறார்.
கடந்த 10 மாதத்திற்கு முன்பு தேவிகா வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று காலை 4 மணி அளவில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் தேவிகா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் தகவலை அறிந்த அரியாங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி 10 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். முதல்கட்ட விசாரணையில் தனது படிப்பிற்கு கணவர் பணம் தரவில்லை என்பதால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது..
0
0