விழுப்புரத்தில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியிடம் பாலியல் சில்மிஷம்: அரசு பேருந்து நடத்துனர் கைது..!!

Author: Aarthi Sivakumar
10 December 2021, 9:20 am
Quick Share

விழுப்புரம்: அரசு பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பேருந்து நடத்துநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரத்தில் நகரப் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவி ஒருவரிடம் பேருந்தின் நடத்துனர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக மாணவி கானை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இரவில் விழுப்புரத்திலிருந்து கொத்தமங்கலம் சென்ற பேருந்தில் கூட்டம் இல்லாததை பயன்படுத்தி நடத்துநர் பாலியல் தொல்லை தந்துள்ளது தெரியவந்துள்ளது. மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் அரசு பேருந்து நடத்துநர் சிலம்பரசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் கன்னியாகுமரி மாவட்டம் குளைச்சலில் மீன் விற்ற மூதாட்டியைப் பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட சம்பவமும், தொடர்ந்து நேற்று நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினரை வலுக்கட்டாயமாக பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து நடத்துநர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 390

0

0