வீடேறி மாணவியை பெண் கேட்ட கல்லூரி மாணவன்.. தரமறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2024, 8:30 pm

திருவள்ளூர் மாவட்டம் கொசவன் பேட்டை காமாட்சி நகர் பகுதியைச் சேர்ந்த சந்திரகுமாரி- சிவ பாலசாமி தம்பதியரின் மகளான சாய் லட்சுமி பிரியா (19) சென்னை தியாகராய கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு கல்வி பயின்று வருகிறார்.

அதே கல்லூரியில் தன்னுடன் படிக்கும் அத்திப்பட்டு புதுநகர் பகுதியைச் சேர்ந்த பரத் (21) என்ற மாணவனும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாணவி சாய் லட்சுமி பிரியாவை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு ஏற்கனவே அவரது பெற்றோரிடம் பரத் கேட்டதாக தெரிகிறது ஆனால் மாணவியின் பெற்றோர் அதற்கு மறுத்ததால் ஆத்திரத்தில் இருந்த பரத் திடீரென மாணவியின் வீட்டிற்குள் புகுந்து பெண் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளான்

அப்போது மாணவியின் தாய் சந்திரகுமாரி தனது பெண்ணை உனக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்ததால் ஆத்திரத்தில் மாணவன் பரத் அங்கிருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து சரமாரியாக கழுத்தில் குத்தியுள்ளார்

இதில் பலத்த காயம் அடைந்த சந்திரகுமாரி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார், அப்போது சந்திரகுமாரி கூச்சலிட்டதை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அங்கிருந்து தப்ப முயன்ற மாணவனை வீட்டுக்குள் தள்ளி பூட்டி இதுகுறித்து பெரியபாளையம் போலீசாருக்கு அளித்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சந்திரகுமாரியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்து வைக்க மறுத்ததால் தன்னுடன் படிக்கும் மாணவியின் தாயை கத்தியால் குத்திய இளைஞரின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!