ஒன்னு ரெண்டு இல்ல 23 அரியர்..! கொரோனா புண்ணியத்தால் ஆல் பாஸ் ஆன மாணவர்

28 August 2020, 4:50 pm
Quick Share

அரியர் ஆல் பாஸ் என்ற அறிவிப்பால் கல்லூரி மாணவர் ஒருவர் கொரோனாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் ஆன்லைன் மூலம் வீடுகளில் இருந்து கல்வி கற்று வருகின்றனர். இந்த சூழலில் 10 மற்றும் 11 வகுப்பு மாணவர்களின் தேர்வு குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இறுதியாக மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வருகை பதிவு மற்றும் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வு தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களின் பாதுகாப்பு அவசியம் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதனால், அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தி இருந்த மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என மீண்டும் ஒரு அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டார்.

இந்த அறிவிப்பால் கல்லூரி தேர்வை நினைத்து அச்சத்தில் இருந்த மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். மட்டும் இன்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதள பக்கங்களில் நன்றிகள் குவிந்தன. மீம் கிரியேட்டர்கள் தங்கள் பங்கிற்கு அவர்களால் முடிந்த வரை முதலமைச்சரை பாராட்டி மீம்களை தெரிக்க விட்டனர்.

இந்த நிலையில், அரியர் ஆல் பாஸ் குறித்து திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் கூறுகையில், தனியார் கல்லூரியில் என்ஜியரிங் படித்து வந்தேன், எடமலைப்பட்டி கிராப்பட்டிதான் என் ஊர்.. என் பெயர் சஞ்சய் நேரு.. 23 வயதாகிறது.. நான் மெட்ரிக்கில் 10-ம் வகுப்பு தேர்வில் 427 மார்க் எடுத்தேன்.. பிளஸ்-2வில் 905 மார்க் எடுத்தேன்.. என்ஜினீயரிங் பாடங்கள் எதுவுமே புரியவில்லை. மனப்பாடம் செய்தாலும் எதுவுமே எனக்கு ஏறல.

சிபிஎஸ்இ படித்த மாணவர்கள் மட்டும் இதை எளிதில் புரிந்து கொண்டனர்… இதனால் படிப்பில் எனக்கு சுத்தமா ஆர்வமே இல்லாமல் போய்விட்டது… பேசாமல் பாதியிலேயே நின்னுடலாமான்னுகூட யோசிச்சேன்.. ஆனால் எங்க வீட்டில் டிகிரி வேணும்னு சொல்லிட்டாங்க.

முன்னாடியெல்லாம் அரியர்களை விரும்புற நேரத்தில் எழுதலாம்.. ஆனால் இப்போ அப்படி கிடையாது.. முதல் வருஷம் அரியர் முடிச்சாதால்தான் 4-ம் வருஷத்துக்கு அனுப்பி வைப்போம்னு அண்ணா யூனிவர்சிட்டி சொல்லிவிட்டது.. எனக்கு மொத்தம் 23 அரியர்கள்.. அதனால வேற வழியில்லாமல் 23 அரியர் பாடங்களுக்கும் பீஸ் கட்டினேன்.

இந்த சமயத்தில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என் அரியரை எல்லாம் பாஸ் செய்து அறிவிச்சிட்டார்.. இது எனக்கு ரொம்ப சந்தோஷத்தை தந்துள்ளது.. அரியர் எழுதுவது ஏழை மாணவர்களுக்கு பொருளாதார சுமையை தருகிறது… முதலில் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.150 பீஸ் கட்டணும்.. தேர்வுக்கு பிறகு மறுமதிப்பீடு கேட்க ரூ.150 கட்டணும்.. பாஸ் ஆகும் மார்க் எடுத்திருந்தால் தவறுகளை சுட்டிக்காட்டி திரும்பவும் அனுப்ப ரூ.450 செலவழியும்.

ஆகையினால் இந்த ஆல்பாஸ் முடிவு என்னை போன்ற மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.. எங்க கிளாஸில் 12 மாணவ -மாணவிகள் உள்ளனர்.. இவர்களில் ஒரு மாணவியை தவிர்த்து எல்லாருமே அரியர் வெச்சிருந்தோம்.. இப்போ ஆல் பாஸ் ஆகிவிட்டோம்.. கொரோனாவுக்கு மிக்க நன்றி” என்றார்.

Views: - 0

0

0