காதலர் தினம் கொண்டாட திருடனாக மாறிய கல்லூரி மாணவன் : ச்சை.. இப்படியெல்லாமா பண்ணுவாங்க!!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2023, 5:02 pm

விழுப்புரம் அருகே காதலர் தினம் கொண்டாடுவதற்காக திருடனாக மாறிய கல்லூரி மாணவன் உட்பட இருவர் கைது.

விழுப்புரம் அருகே உள்ள மலையரசன் குப்பம் கிராமம். இந்த கிராமத்தில் இன்று அதிகாலையில் ரேணுகா என்பவருக்கு சொந்தமான ஆட்டுப்பட்டியில் இருந்து ஆடு ஒன்றினை உயர் ரக பல்சர் இருசக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் எடுத்துச் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்து ரேணுகா திருடன் திருடன் என கூச்சலிட்டுள்ளார்.

இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆடினை திருடிச் சென்ற கல்லூரி மாணவன் அரவிந்த் குமார் (20) மற்றும் அவனது நண்பன் மோகன் (20) ஆகிய இருவரையும் மடக்கி பிடித்து கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அரவிந்த் குமார் காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு பணம் இல்லாத காரணத்தால் ஆட்டினை திருடியதாக கூறியுள்ளார்.

அதற்கு உடந்தையாக அவரது நண்பர் மோகன் செயல்பட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும், இவர்கள் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இதுபோன்ற ஆடு திருடும் சம்பவங்கள் நடைபெற்று இருப்பதால் மற்ற ஆடு திருட்டு சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இவர்கள் பயன்படுத்திய விலை உயர்ந்த பல்சர் இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?