கல்லூரி மாணவர்களை காவு வாங்கிய மரணக் கிணறு மூடப்படுமா? சாலையோர கிணறுகளால் தொடரும் உயிர் பலி : பொதுமக்கள் கோரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2022, 4:34 pm
Car Accident - Updatenews360
Quick Share

கிணற்றுக்குள் கார் பாய்ந்து 3 பேர் பலியான விபத்தில், காரை ஓட்டிச் சென்ற கல்லூரி மாணவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த தொண்டாமுத்தூர் காவல்துறையினர்.

கோவை வடவள்ளி, நவாவூரை சேர்ந்தவர் விக்னேஷ்பாபு. இவரது மகன் 18 வயதான ஆதர்ஸ் என்ஜினீயங் மாணவரான இவரும், இவரது நண்பர்களும் ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக தொண்டாமுத்தூர் அருகே பூலுவபட்டியில் உள்ள தனியார் ரிசார்ட்டிற்கு சென்றுள்ளனர்.

ஓணம் கொண்டாட்டம் முடிந்து திரும்பிய போது கிணற்றில் கார் விழுந்து, மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த காரை ரோஷன் ஓட்டியுள்ளார், காரை ஓட்டி வந்த ரோஷன் மட்டும் கதவை திறந்து வெளியே வந்து உயிர் தப்பினார்.

ஆதர்ஷ், ரவிகிருஷ்ணன், நந்தனன் ஆகிய 3 பேரும் காருக்குள்ளே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய கல்லூரி மாணவர் ரோஷன் மீது அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், அஜாக்கிரதையாக மரணம் விளைவித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

கார் கிணற்றுக்குள் பாய்ந்து 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்னமநல்லூர் ஊராட்சியில் 2 கிணறுகளும், தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் 3 கிணறுகளும், பூலுவப்பட்டியில் ஒரு கிணறும் சாலையோரத்தில் உள்ளது. இங்கு விபத்துகள் நிகழ்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே திறந்த வெளி கிணறுகளை இரும்பு கம்பிகள் கொண்டு மூடவேண்டும். சாலையோர கிணறுகள் அருகே வேகத்தடுப்பு அமைக்க வேண்டும். திறந்த வெளி கிணறுகளை சுற்றி காம்பவுண்ட் சுவர் எழுப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Views: - 368

0

0