நடப்பு கல்வியாண்டில் வாரத்திற்கு 6 நாட்களுக்கு கல்லூரிகள் செயல்படும் – அரசாணை வெளியீடு..!!

5 February 2021, 4:47 pm
clg 6 days - updatenews360
Quick Share

சென்னை: நடப்பு கல்வியாண்டு முழுவதும் கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டது. அதில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலை, அறிவியல், தொழில்நுட்ப, என்ஜினீயரிங், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வருகிற 8ம் தேதி முதல் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வரும் 8ம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் நிலையில் வாரத்திற்கு 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 8ம் தேதி முதல் திறக்கப்படும் கல்லூரிகள் இந்த கல்வியாண்டு முழுவதும் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Views: - 0

0

0