வந்தாச்சு.. கோவை மக்களுக்கு அடுத்த பொழுதுபோக்கு அம்சம் : நாளை திறக்கப்படும் வள்ளுவர் சிலை!

Author: Udayachandran RadhaKrishnan
4 January 2024, 5:13 pm

ஜொலிக்கப் போகும் குறிச்சி குளம்.. நாளை திறக்கப்படும் திருவள்ளுவர் சிலை : கோவை மக்கள் மகிழ்ச்சி!

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் உள்ள 7 குளங்கள் சீரமைக்கப்பட்டு குளக்கரைகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

அதே போல் ரேஸ்கோர்ஸ், பகுதியில் நடைபாதைகள் மேம்படுத்தப்பட்டு பிரம்மாண்ட மீடியா டவர், குழந்தைகளுக்கான விளையாடும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் பொள்ளாச்சி சாலையில் உள்ள குறிச்சி குளம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் தமிழ் எழுத்துகளை கொண்டு சுமார் 2.5 டன் எடையில் 20 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை, பொதுமக்கள் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.

இந்நிலையில் குறிச்சி குளத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கானொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

இந்நிலையில் இன்று காலை 12 மணியளவில் திருவள்ளூவர் சிலையில் உள்ள பராமரிப்பு மற்றும் இறுதி கட்ட பணிகள், விழா ஏற்பாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?