புது நடிகரை Porn Star நடிகர் என உளறிய காமெடி நடிகர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

Author: Rajesh
2 June 2022, 6:27 pm
Quick Share

தி லெஜண்ட் படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார் சரவணன். இப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து இயக்கி உள்ளனர். இப்படத்தின் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக இந்தி நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்துள்ளார். மேலும் மயில்சாமி, பிரபு, விஜயகுமார், ரோபோ சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள இப்படத்தில் விஞ்ஞானியாக நடித்துள்ளார் லெஜண்ட் சரவணன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியிட உள்ளனர்.

லெஜண்ட் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பூஜா ஹெக்டே, தமன்னா, ராய் லட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஊர்வசி ரவ்துலா, டிம்பிள் ஹயாத்தி என 10க்கும் மேற்பட்ட முன்னணி நடிகைகள் கலந்துகொண்டனர். அப்போது, இந்த படம் குறித்தும், சரவணன் குறித்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர்கள் தெரிவித்தனர். அப்போது பேசிய காமெடி நடிகர் டி.கே.எஸ். Pan India Star ஏன சொல்வதற்கு பதிலாக பான் ஸ்டார்ன்னு சொல்லிட்டாரு. அந்த காமெடியான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 1004

0

0