திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் புகார்..

2 November 2020, 12:49 pm
Handicapped compliants - Updatenews360
Quick Share

கோவை : மாற்றுத்திறனாளிகள் குறித்து இழிவாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் எம்.பி.யுமான திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சக்‌ஷம் என்ற மாற்றுத்திறனாளிகள் அமைப்பு கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது: எங்கள் அமைப்பானது மாற்றுத்திறனாளர்கள் நலன் விரும்பும் தேசிய அமைப்பு ஆகும். இந்த அமைப்பின் மூலமாக நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளர்களுக்கு சமூக அந்தஸ்தை பெறுவதற்கு பல தன்னார்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

இந்த சூழலில், பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் பரப்புரையை சமூக ஊடகத்தில் பார்த்தோம். அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக பற்றும் மக்கள் மேம்பாட்டு எண்ணத்தின் மூலத்தையும் பெற்று இருக்கவேண்டிய ஒரு பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் மாற்றுத்திறனாளர்களை கீழ் தரமான வார்த்தைகளால் “நொண்டி” என்று குறிப்பிட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.

ஒரு மக்களவை உறுப்பினர் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக அந்தஸ்து பெறுவதற்கான மாற்றுத்திறனாளர் உரிமைச்சட்டத்தில் (RPWD ACT 2016) குறிப்பிட்டிருக்கும் ஷரத்துகளின் வலிமை தெரியாமல் வாய்க்கு வந்தவாறு மாற்றுத் திறனாளிகளின் மனம் புண்படும் வகையில் இழிவுபடுத்தி கூறியது கண்டிக்கத்தக்கது மற்றும் சட்டத்துக்கு முரணானது.

தன்னம்பிக்கையுடன் வாழ்ந்துவரும் பல மாற்றுத் திறனாளர்களை இழிவு படுத்தும் விதமாக தனது அரசியல் சுயலாபத்திற்காக “நொண்டி” என்ற வார்த்தையை குறிப்பிட்டு பேட்டி அளித்திருப்பது மாற்றுத்திறனார்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. திருமாவளவன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Views: - 18

0

0