பாலியல் வன்முறைக்கு புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் மற்றும் இமெயில் முகவரி அறிவிப்பு

18 May 2021, 6:25 pm
banda_rape_updatenews360
Quick Share

கன்னியாகுமரி: ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறைக்கு புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் மற்றும் இமெயில் முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:- குடும்ப வன்முறைகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் முதியோர்களுக்கான அவசர உதவிக்கு கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரின் வாட்ஸ்அப் எண் 93 44 56 23 00 புகார் தெரிவிக்கலாம் மேலும் சமூக நல அலுவலரின் செல்போன் எண் 9442829968 குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் செல்போன் 9486898503 ஆகும் மேலும் சட்டம் சார்ந்த ஆலோசனைக்கு 04652291744 தேசிய சட்ட உதவி ஹெல்ப்லைன் எண் 15100 ஆகும். தமிழக சட்ட உதவி ஹெல்ப்லைன் எண் 18004252411 மேலும் பெண்களுக்கான தேசிய உதவி மைய எண் 181, குழந்தைகள் பாதுகாப்பு எண் 10 98 ஆகிய எண்களில் அழைக்கலாம்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பெயர் பாலினம் வயது மற்றும் குறைகள் வன்முறைக்கு ஏற்படுதல் அல்லது மற்றவரால் துன்புறுத்துதல் போன்ற புகார்கள் சம்பந்தப்பட்ட எதிர் மனுதாரரின் பெயர் வயது பாலினம் ஆகிய தகவல்களை [email protected] மற்றும் www.nalsa.gov.in என்ற ஈமெயில் முகவரிக்கோ தெரிவிக்கலாம், இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Views: - 136

0

0