நிறைவு பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 21 காளைகளை அடக்கிய கார்த்திக்கு கார் பரிசு…!!!

Author: kavin kumar
17 January 2022, 8:56 pm
Quick Share

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு பெற்ற நிலையில், 21 காளைகளை அடக்கி கார்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையன்று மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு அடுத்த நாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்தநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு பொங்கலையொட்டி கடந்த 14-ம் தேதி அவனியாபுரத்திலும், 15-ம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று முன்தினம் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு நேற்று முன்தினம் அமலில் இருந்ததால் ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டு, நேற்று (திங்கட்கிழமை) அங்கு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

விறுவிறுப்புடன் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் 8 சுற்றுகளில் 1020 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதில் 21 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்திக் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. கார் சாவியை கார்த்திக்கிடம் அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். இதையடுத்து 19 காளைகளை அடக்கி அலங்காநல்லூர் ராம்குமார் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 13 காளைகளை அடக்கி மூன்றாம் இடம் பிடித்த சித்தாலங்குடி கோபாலகிருஷ்ணனுக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

Views: - 285

0

0