பக்தர்களின் மனங்களை கவர்ந்த பூசாரியின் பணி நிறைவு.. கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் பாராட்டு விழா!

Author: Udayachandran RadhaKrishnan
3 June 2024, 12:18 pm

கோவை அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் பிரசித்தி பெற்ற தண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நகரின் முக்கிய கோவில்களில் ஒன்றாக போற்றப்படும் பழமை வாய்ந்த திருக்கோவில் ஆகும்.

கோவை மக்களின் குலதெய்வம் என்று வழிபடுவார்கள். இந்நிலையில் இங்கு 25 ஆண்டு காலமாக பணியாற்றி வந்தார் பூசாரி சிவக்குமார். இவர் கோவிலில் நலன் மற்றும் முன்னேற்றத்திற்கு பல்வேறு பணிகளை செய்து உள்ளார்.

இவர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் தமிழக மட்டுமல்லாது வெளி மாநிலம் வெளிநாடுகளில் இருந்து பல ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக் கடனை, வேண்டுதலை நிறைவேற்றி செல்கின்றனர்.

மேலும் படிக்க: தேர்தல் விதி மீறி கொடிக்கம்பம்.. பாமக பிரமுகரை தாக்கிய திமுகவினர் : வெடித்த மோதல்.. சாலை மறியல்!

திருவிழா காலங்களில் வரும் பக்தர்களின் கூட்டத்தை பொருள்படுத்தாமல் அம்மனிடம் வழிபாடு செய்து அவர்களுக்கு அருள் ஆசி வழங்க பூஜைகள் சிறப்பாக செய்து கொடுப்பார்.

இதனால் இவர் அங்கு வரும் பக்தர்களின் மனதை கவர்ந்தார்.
இதனை அடுத்து பணி நிறைவு பெற்ற பூசாரி சிவக்குமாருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.

கோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்த பணி நிறைவு பாராட்டு விழாவில் அவருடைய உறவினர்கள் நண்பர்கள் மற்றும் உடன் பணி புரிந்த சக ஊழியர்கள் அவருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர்.

  • sivakumar broke karthi and tamannaah love life தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!