‘இதுக்காக தான் கொலை செய்தோம்’: சிறப்பு எஸ்ஐ படுகொலை வழக்கில் வெளியான உண்மை…வாக்குமூலம் அளித்த முக்கிய குற்றவாளி..!!

Author: Aarthi Sivakumar
24 November 2021, 4:42 pm
Quick Share

திருச்சி: நவல்பட்டு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி நவல்பட்டு காவல் உதவி ஆய்வாளர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆடு திருடும் கும்பலை பிடிப்பதற்காக விரட்டிச் சென்றபோது புதுக்கோட்டை மாவட்டம் பள்ளத்துப்பட்டி அருகே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு சிறார்கள் உள்பட .மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த கொலை வழக்கில், மணிகண்டன் தான் முக்கிய குற்றவாளியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மணிகண்டன் மற்றும் இரண்டு சிறுவர்களை தனித்தனியாக வைத்து காவல்துறையினர் விசாரணை செய்து வாக்குமூலம் வாங்கி உள்ளனர்.

இந்நிலையில் காவல்துறை உதவி ஆய்வாளர் பூமிநாதனின் செல்போன் எண்ணை டிராக் செய்தபோது அவர் சக காவலர்கள் சித்திரவேலு மற்றும் சேகர் ஆகியோருக்கு போன் செய்ததோடு மற்றொரு நம்பருக்கும் போன் செய்து பேசியுள்ளது தெரியவந்தது.

மேலும், தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே உள்ள தோகூர் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் நம்பர் என்பது தெரியவந்தது. உடனடியாக தனிப்படை போலீசார் அந்த கிராமத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தபோது அந்த நம்பர் மணிகண்டனின் தாயார் உடையது என்பது தெரியவந்தது.

காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் மணிகண்டனின் தாயாரிடம் பேசியது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மணிகண்டனின் தாயாரை காவல்துறையினர் மண்டையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

மேலும், நடத்திய தீவிர விசாரணையில் 3 பேரும் ஆடு திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்தபோது காவல்துறை உதவி ஆய்வாளர் பூமிநாதன் தங்களை பின் தொடர்ந்து வந்து பள்ளத்துப்பட்டி அருகே மடக்கிப் பிடித்து விட்டதாகவும், தங்களை அமரவைத்து விசாரணை மேற்கொண்டு மற்ற காவலர்களையும் இங்கு வருமாறு தகவல் அழைத்ததாகவும் மேலும் காவல்துறை உதவி ஆய்வாளர் பூமிநாதன், மணிகண்டனின் தாயார் நம்பரை பெற்று அவருக்கு தொடர்பு கொண்டு இந்த சம்பவம் தொடர்பாக கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த மணிகண்டன் கல்லால் காவல்துறை உதவி ஆய்வாளர் பூமிநாதன் தலையில் தலையில் தாக்கியதாகவும், இதனை தொடர்ந்து பயத்தில் இரண்டு சிறுவர்களும் ஓடிச்சென்று அருகில் உள்ள ரயில்வே ட்ராக் அருகே சென்று நின்று கொண்டதாகும் தெரிவித்துள்ளனர்.

போலீசார் தங்களை கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மணிகண்டன் மட்டும் தான் கையில் வைத்திருந்த ஆடு அறுக்கும் அரிவாளால் சரமாரியாக பூமிநாதனை வெட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பித்து வந்து விட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

காவல்துறை அதிகாரி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 384

0

0