திருத்தணி அருகே காங்கிரஸ் பிரமுகர் மர்மமான முறையில் படுகொலை.. சிசிடிவியில் சிக்கிய தடயம்?

Author: Udayachandran RadhaKrishnan
11 June 2025, 1:06 pm

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி ஆர்.கே. பேட்டை வட்டம் அம்மையார்குப்பம் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் நெசவு தொழிலாளி இந்த பகுதி நகர காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் பதவி வகித்து வருகிறார்.

இவரது மனைவி சிவகாமி. மகன்கள் கணபதி, பார்த்திபன், ராஜசேகர், ஆகியோர்கள் வசித்து வருகின்றனர். இவர் வீட்டில் இரவும் அனைவரும் உறங்கி விட்ட பின்பு வீட்டில் உள்ள நெசவுத்தூள் எந்திரங்கள் மூலம் இரவு முழுவதும் நெசவு வேலை பார்த்து வந்துள்ளார்

இவர் காலையில் வீட்டில் இல்லை என்று இவரது மனைவி சிவகாமி தேடி உள்ளார். பின்னர் வீட்டின் பின்புறம் பார்த்தால் ராஜேந்திரன் தலையில் பலத்த காயங்களுடன் ரத்தம் வெளியேறி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.,

இவரது மனைவி அலறல் சத்தம் கேட்டு அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் ஆர்.கே. பேட்டை போலீசுக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி டிஎஸ்பி கந்தன் பிரேதத்தை கைப்பற்றி திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

சம்பவம் குறித்து ஆர்கே பேட்டை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் சம்பவ இடத்தில் மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடயே உறவினர்கள் திடுக்கிடும் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளனர். இறந்து போன ராஜேந்திரன் வீட்டு அருகில் உள்ள அரசு பள்ளியில் கஞ்சா பழக்கம் உள்ள இளைஞர்கள் மாணவர்கள் அதிகம் உள்ளனர்.

மேலும் வெளியூரை சேர்ந்த இளைஞர்களும் இந்த பகுதியும் பள்ளியின் பின்புறம் வருகிறார்கள். ராஜேந்திரன் வீடு பின்புறமும் இங்கே உள்ளதால், ராஜேந்திரன் அவப்பொழுது இதனை தட்டி கேட்டு கஞ்சா போதை இளைஞர்கள் தான் இந்த படுகொலை காரணம் என்றும் மேலும் ராஜேந்திரன் வீட்டின் பின்புறம் அதிக இரும்புகள் கம்பிகள் உள்ளது.

இதனை திருடுவதற்காக வந்த திருடர்கள் கூட ராஜேந்திரனை கொலை செய்திருக்கலாம் என்று திடுக்கிடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

போலீசார் கஞ்சா பழக்கத்தை இந்த பகுதியில் விற்பனையை கட்டுப்படுத்த முன் வர வேண்டும் மாணவர்கள் அதிகம் கஞ்சா பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று பொதுமக்கள் ராஜேந்திரன் உறவினர்கள் பகிரங்க குற்றச்சாட்டு.

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தனிப்படை இந்த பகுதியில் செயல்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!