உன் கூட உல்லாசமாக இருக்க ஆசை.. திருநங்கையை கூட விட்டுவைக்காத எம்எல்ஏ.. குவியும் புகார்!
Author: Udayachandran RadhaKrishnan23 August 2025, 4:27 pm
எம்எல்ஏ மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் வருவது அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள நடிகை ரினி அன் ஜார்ஜ், அரசியல்வாதி ஒருவர் தன்னை ஹோட்டலுக்கு அழைத்ததாக பகீர் புகாரை கூறினார். ஆனால் அவர் யார் என்று கூறவில்லை.
அந்த அரசியல்வாதி யார் என்ற கேள்வி கேரளாவில் றெக்கை கட்டி பறந்தன. உடனே பாஜக போராட்டத்திலும் இறங்கியது. பின்னர் அந்த நபர் காங்., எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததில் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என குரல் எழுந்தது. கேரள மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவராக உள்ள ராகுல் தற்போது தான் வளர்ந்து வரும் தலைவராக உருவெடுத்தார். இந்த நிலையில் கட்சி பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் மீது எழுத்தாளர் ஹனி பாஸ்கரனும் பாலியல் புகார் கொடுத்துள்ளார். தனக்கு அடிக்கடி ராகுல் மம்கூத்ததில் மெசேஜ் செய்தார். சைக்கோ போல நடந்து கொண்டதாகவும், கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்-
இதனிடையே திருநங்கை ஒருவரிடம் எம்எல்ஏ ராகுல் தவறாக நடந்து கொண்டதாக தற்போது புகார் எழுந்துள்ளது. திருநங்கை அவந்திகா இது குறித்து கூறும் போது, தேர்தல் விவாதத்தில் பங்கேற்ற போது, ராகுல் உடன் அறிமுகம் ஏற்பட்டது.

இது நட்பாக மாறியது. ஆனால் அது அருவருப்பானதாக இருந்ததாகவும், காரணம், என்னை பலாத்காரம் செய் ஆசையாக இருப்பதாக ராகுல் கூறியதாகவும், பெங்களூர் அஇல்லது ஐதராபாத் செல்வோம் என மெசேஜ் செய்யதாக அவந்திகா கூறியுள்ளார்.
இதையடுத்து அவர் மீது புகார் குவிந்த வண்ணமாக உள்ளது. இனி காங்கிரஸ் கட்சி என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
