தமிழகத்தின் பிரபல காங். எம்பிக்கு கொரோனா…! மனைவிக்கும் தொற்று

11 August 2020, 9:49 am
Cbe Corona - Updatenews360
Quick Share

சென்னை: காங்கிரஸ் எம்பி வசந்தகுமார், அவரது மனைவி இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் அரசியல் கட்சி தலைவர்களையும் பாதித்து வருகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, பல மாநில முதலமைச்சர்கள், கவர்னர் என தொடர்ந்து தாக்கி வருகிறது.

தமிழகத்திலும் எம்பிக்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அவ்வாறு மொத்தம் 32 பேர் இதுவரை பாதிக்கப்பட்டனர்.

இந் நிலையில் மேலும் ஒரு முக்கிய அரசியல் பிரமுகருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழக எம்பியும், பிரபல தொழிலதிபருமான வசந்த குமாருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

Vasanthakumar - Updatenews360

இதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது மனைவிக்கும் தொற்று உறுதியாக, அவரும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

Views: - 32

0

0