ஏர் இந்தியா விற்பனைக்கு காரணம் காங்கிரஸ் கட்சி தான் : வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!!

5 February 2021, 4:18 pm
vanathi- Updatenews360
Quick Share

திருப்பூர் : இந்தியாவில் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை நிலையை மாற்றவும் உலக நாடுகளோடு போட்டி போடவே அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டு வருவதாக திருப்பூரில் பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் 2021-2022 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள சூழ்நிலையில் பட்ஜெட் குறித்து திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் அனைத்து தொழில் துறை மற்றும் அனைத்து தரப்பு மக்களும் வளர்ச்சியடையக் கூடிய வகையில் பட்ஜெட் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாகவும் , நாடு முழுவதும் 100 சைனிக் பள்ளிகளை உருவாக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு , பட்டியலின மாணவர்களின் கல்விக்காக 35,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் கார்ப்பரேட்களுக்கான பட்ஜெட் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் குறித்து பதிலளித்த வானதி சீனிவாசன், ஏர் இந்தியா விற்பனை பாஜகவின் முடிவல்ல இதற்கு முன் இருந்த அரசின் முடிவே எனவும் , இந்தியாவில் நிலவுகின்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை நிலையை மாற்றவே அந்நிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருவதாகவும் , உலக நாடுகளுடன் போட்டி போடவுமே தனியார் முதலீடுகள் ஈர்க்கபடுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் விவசாயிகளுக்கு சலுகைகள் இல்லாத பட்ஜெட் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரக் கூடிய சூழ்நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கொண்டு வந்த 3 வது சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தான் விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு சலுகைகளும் எதிர்த்து வருவதாகவும் தெரிவித்தார்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் எதற்காக செயல்படுகிறார்கள் என்பது தற்போது அனைவருக்கும் தெரிந்திருக்கக் கூடிய சூழ்நிலையில் இந்தியர்கள் தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் யாரும் தலையிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒவ்வொரு சட்டத்தையும் அனைவரின் ஆலோசனையையும் கேட்டு கொண்டு வரமுடியாது , அரசியலமைப்பு சட்டத்திலும் அவ்வாறு இல்லை , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் மக்களின் நலனுக்காக சில சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் , குடியரசுத்தலைவர் அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்படுகின்றனர் , இதில் பாஜக கட்சி சார்ந்து கருத்து சொல்வதற்கில்லை எனவும் தமிழகத்தில் பாஜக இடம்பெறும் கூட்டணி அதிமுக தலைமையில் செயல்படுவதால் சசிகலா வருகை , இணைப்பு குறித்து அதிமுகதான் முடிவெடுக்கும் எனவும் தெரிவித்தார்.

Views: - 0

0

0