தர்மசங்கடமான நிலையில் காங்கிரஸ் கட்சி.. ஓபனாக பேசிய காங்., எம்பி கார்த்தி சிதம்பரம்!

Author: Udayachandran RadhaKrishnan
20 May 2025, 1:04 pm

கோவையில் இன்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் பேசும்போது:- கோவையில் மலுமிச்சம்பட்டியில் நேற்று காங்கிரஸ் கள நிலவரம் குறித்து ஆய்வு செய்ததாகவும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வலுவாக உள்ளதாகவும், தமிழகத்தில் அரசியல் நிலவரத்தை பொருத்த வகையில் தி.மு.க கூட்டணி வலுவாக உள்ளது.

தமிழக துணைவேந்தர்கள், தமிழக கவர்னர் முகாமில் அ.தி.மு.க பெரிய வாக்கு வங்கி வைத்து உள்ளது. இதை மறுக்க முடியாது. ஆனால் அ.தி.மு.க பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து இருப்பதை அ.தி.மு.கவின் கடைமட்ட தொண்டர்கள் விரும்பவில்லை.

பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி வேண்டாம் என்று கூறிய பிறகு ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் இப்போது மீண்டும் கூட்டணி வைத்தது ஏன் ? என்று அவர்கள் கேட்கிறார்கள். எனவே அதை வெல்லும் கூட்டணி என்று கூற முடியாது.

தமிழக வெற்றி கழகம் தேர்தலில் எந்த அளவு வாக்கு பெறும் என்று தெரியவில்லை. அரசியல் கட்சி என்றால் அனைத்து பிரச்சனைகளிலும் கருத்து கூற வேண்டும். அவர்கள் தனித்து நிற்பார்களா ? என்ன முடிவு என்று தெரியவில்லை.

கட்டமைப்பு மிக முக்கியம். அதே போன்று பாட்டாளி மக்கள் கட்சி என்ன ? நிலை எடுக்கும் என்று தெரியவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டுவது தவறில்லை.

அனைத்து கட்சிகளுக்குமே அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியோருக்கும் அந்த ஆசை இருக்கும் . தமிழகத்தில் 1967 க்கு பிறகு காங்கிரஸ் கட்சி அவ்வாறு இல்லை. இதில் எனக்கு வருத்தம் தான்.

தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க பெரும் தொகுதிகளை வைத்து காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் போட்டியிட கேட்டு பெறுமா ? என்று கூற முடியாது.

கூட்டணி தர்மம் என்று உள்ளது.ஆளும் கட்சியாகவும் இல்லாமல் எதிர்க்கட்சியாகவும் இல்லாமல் இருப்பதால் காங்கிரஸிற்கு ஒரு தர்ம சங்கடமான நிலை உள்ளது. தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை உள்ளது.

தமிழகத்தில் இந்திய கூட்டணி வலிமையாக உள்ளது. முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரத்தின் பேச்சை சரியாக கேட்காமல் புரிந்து கொள்ளாமல் அவரது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. அவர் பாரதிய ஜனதா கட்சி வலிமையாக உள்ளது. தேர்தலில் அவர்களை எதிர் கொள்வதற்கு இந்திய கூட்டணியில் வலிமை தேவை. என்ற அர்த்தத்தில் தான் பேசி உள்ளார்.

தமிழகத்தில் இந்திய கூட்டணி வலிமையாக உள்ளது சிந்தூர் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியை வரவேற்கிறோம். பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் வித்தியாசமானது. இதில் மத ரீதியாக பிரித்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடி வரவேற்கத்தக்கது.

அதே நேரத்தில் பல கேள்விகள் ? உள்ளன.அங்கே பாதுகாப்பு இல்லாதது குறித்தும், பாதுகாப்பு குறைபாடு குறித்தும் கேள்விகள் இருக்கின்றன. எனவே தான் பாராளுமன்ற கூட்டத்தில் இது குறித்து விவாதத்தின் போது பிரதமர் மற்றும் ராணுவ அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி உள்ளோம்.

தமிழக கவர்னர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு இந்திய ஜனாதிபதி கடிதம் அனுப்பி உள்ளார். உச்ச நீதிமன்றம் பதில் அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து இந்திய ஜனாதிபதி எழுதி இருக்கும் கடிதத்திற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது.

இருப்பினும் அதற்கு பதில் அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனாலும் இப்ப பிரச்சனையில் தமிழக முதலமைச்சர், பிற மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதி எடுத்து இருக்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

  • suriya 46 movie silet producer is gnanavel raja படம் ஃபிளாப் ஆனதால் தலைமறைவாக சூர்யா படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்? அடப்பாவமே!
  • Leave a Reply