தமிழர்களையும், தமிழ்நாட்டையும் காட்டிக் கொடுப்பவர் அண்ணாமலை ; செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
10 April 2024, 2:53 pm
Quick Share

அண்ணாமலை தமிழர்களையும், தமிழ்நாட்டையும் காட்டிக் கொடுப்பவர் என்று திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோ மற்றும் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.

மேலும் படிக்க: இந்தியாவை அல்ல… தமிழ்நாட்டுல ஒரு முட்டுச் சந்தைக் கூட காப்பாற்ற முடியாது ; CM ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி..!!

அவரை திருச்சி காங்கிரஸ் கட்சியின் மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ், மேற்கு மாவட்ட தலைவர் கலை, நிர்வாகிகள், சரவணன், மகேந்திரன் மற்றும் கட்சியினர் பொன்னாடை போத்தி வரவேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது :- பிரதமருக்கு இந்தியாவில் எவ்வளவு வேலை இருக்கிறது. அவர் வசதிக்கேற்ப தேர்தல் ஆணையத்திடம் அவரது சுற்றுப்பயண நிகழ்வுகளையொட்டி ஏழு கட்டமாக தேர்தலை அவருடைய வசதிக்காக, நிகழ்வுக்காக அறிவிப்பு செய்துள்ளார்.

மாநகராட்சி, ஊராட்சி மன்றத் தேர்தலுக்கு எப்படி மாவட்ட தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்வார்களோ அதுபோல் பிரதமர் சென்னைக்கும் தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து வருகிறார். எப்படியாவது தமிழக மண்ணில் கால் பதிக்க முடியுமா என்று பேராசை இருக்கிறது. தமிழக மக்கள் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தையும், பிரித்தாலும் கொள்கையை கையாளக்கூடிய பாஜகவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த மண் சமூக விடுதலைக்கான, மண் சமூக நீதிக்கான மண்.

ஆகவே, ஆர் எஸ் எஸ்சின் சித்தாந்தம் பாஜகவின் பிரித்தாலும் கொள்கை இந்தியர்களிடையே பிரிவினை ஏற்படுத்துதல் உள்நாட்டு மக்களை வெளிநாட்டில் விற்பது வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுதல் போன்ற நாட்டிற்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். ஒருபோதும் இந்த தேர்தலில் இந்திய மக்கள் இப்படிப்பட்ட பாசிச சக்திகளை அனுமதிக்க மாட்டார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உள்ளது அதேபோல் ஒவ்வொருவருக்கும் இந்த தேசத்தின் மீது, நாட்டின் மீது பார்வை வேண்டும். வாஜ்பையை பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய தந்தையாகவும், குருவாகவும் தேசத்தின் கட்சியின் தலைவராக ஏற்றுக் கொண்டவர்.

மோடி ஏற்றுக் கொண்ட தலைவரான வாஜ்பாய் கூறுகையில், உலகத்தின் இரும்பு மனுஷன் என்று போற்றப்பட்ட இந்திரா காந்தியை துர்கா தேவி என்று கூறினார். துர்கா தேவிக்கு என்ன சக்தி இருக்கிறதோ, ஆளுமை இருக்கிறதோ, அந்த சக்தியும் ஆளுமையும் இந்திரா காந்திக்கு இருப்பதாக கூறினார். அப்படி என்றால் தலைவர் வாஜ்பாய் சொன்னது தவறா..? அல்லது இவர் சொன்னது சரியா…?

இந்த தேசத்தின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு அடியும் பார்த்து செயல்பட்டவர் இந்திரா காந்தி. கட்ச தீவை குறித்து பேசுபவர்கள் வெஜ் பேங்கை குறித்து ஏன் பேசவில்லை? ஏன் மூடி மறைக்க வேண்டும்.

மேலும் படிக்க: திருமுருகன் காந்தி பிரச்சாரம்… மிரட்டல் விடுத்து தடுத்து நிறுத்திய பாஜகவினர் ; கோவையில் பரபரப்பு…

வெஜ் பேங்க் என்பது என்ன அதை எதற்காக இந்திரா காந்தி இந்திய கடல் எல்லையில் கொண்டு சேர்த்தார். வெஜ்பேங்க் என்ற பகுதியில் என்ன என்ன அபூர்வங்கள் கனிம வளங்கள் உள்ளது. உலகத்தில் அது போல் உள்ளதா என்பது குறித்து பேசவில்லை. மோடியிடம் எத்தனையோ விஞ்ஞானிகள், அகழ் ஆராய்ச்சியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் அவர் கேட்டு மக்களிடம் சொல்லட்டும். ஒன்றுமில்லாத கச்சத்தீவு குறித்து மட்டும் பேசி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது இந்தியாவினுடைய எல்லையை விரிவு படுத்தவும் வெஜ் பேங்க் மூலம் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தவும் செய்திருக்கிறார்கள். 7 லட்சம் புலம்பெயர்ந்த தமிழர்கள், தொப்புள் கொடி தமிழ் உறவுகள் அங்கு வாழ்ந்த கொண்டு இருக்கின்றனர்.

அவர்களுடைய வாழ்வில் மிகப்பெரிய பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்ற ரீதியில் இந்த பேச்சு அமைந்துள்ளது. எனவே கச்சத்தீவு பற்றி பேசுபவர்கள் கட்டாயம் வெஜ் பேங்க் குறித்தும் பேச வேண்டும். தற்போது எம்பி யாக இருக்கக்கூடிய திருநாவுக்கரசருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. விரைவில் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்.

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் துரை வைகோவை ஆதரித்தும், தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்கு சேகரிப்பதற்காகவும் இன்று நான் வந்துள்ளேன். இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்பதுதான் இங்கு இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும். பல சங்கடங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் களைந்து இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறோம், எனக் கூறினார்.

நிர்மலா சீதாராமனின் கணவர் பிரபாகரன், மோடி மீண்டும் ஜெயித்தால் சர்வாதிகாரியாக இருப்பார் என கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, “ஜெயிச்சார்னா என்ன..? கடந்த பத்தாண்டு காலமாக மோடி எப்படி செயல்படுகிறார் சர்வாதிகாரி போல தானே செயல்படுகிறார். அவர் சர்வாதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக தான் சிஏஏ திருத்தச் சட்டம் லடாக் பகுதியில் 20 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை சீனாவிற்கு தாரை வார்த்து கொடுத்துள்ளார். இல்லை என்றால் சொல்ல சொல்லுங்கள்.

மோடி சர்வாதிகாரி என நிர்மலா சித்தராமனின் கணவர் பிரபாகரன் மட்டும் கூறவில்லை, மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமியும் குறிப்பிட்டுள்ளார். இந்திய பிரதமராக இருப்பதற்கு தகுதியும் இல்லை. இவர் சீனாவின் தூதுவராக நியமிக்கலாம்,” என தெரிவித்துள்ளார்.

பாஜக அரசு வெஜ்பேங்க் குறித்து பேசாமல் இருக்கும் நிலையில், காங்கிரஸ் ஏன் அது குறித்து பேச மறுக்கிறது என்று எழுப்பிய கேள்விக்கு?, “நாங்கள் தொடர்ந்து இதை பேசி வருகிறோம். தொலைக்காட்சிகளும் தொடர்ந்து இது குறித்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நாடு வல்லரசு ஆனதற்கும் வல்லரசு ஆக வேண்டும் என்று பேசுவதற்கும் பின்னால் மிகப்பெரிய ரகசியம் இருக்கிறது. இந்த ரகசியங்களை வெளியே கூற முடியாது ஹெவிவாட்டர் என்று ஒரு திட்டம் உள்ளது இந்தியாவில் எப்படி இந்த திட்டத்தை வாங்க முடியும் காங்கிரஸ் ஆட்சியில் தான் அணுகுண்டு கண்டுபிடித்தோம்.

பொக்ரனில் அவர்கள் வெடித்த வெடிகுண்டு உலக நாடுகள் எல்லாம் தடை விதித்தது இவை எல்லாவற்றின் யாருடைய கண்டுபிடிப்பு இந்த இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்பதற்கு யார் காரணம் என்றால் இரும்பு பெண்மணி என உலக நாடுகள் பயந்தன. இந்திரா காந்தி தன்னுடைய உயிரைக் கொடுத்து நாட்டின் கட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளார். மோடியோ, பாஜகவோ இந்தியாவை குறித்து பேசுவதற்கு எந்தவித தகுதியும் இல்லை.

அண்ணாமலை என்பவர் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் காட்டிக் கொடுப்பவர். தமிழ்நாட்டு மக்களை காட்டிக் கொடுக்கலாமா..? துரோகி ஆகலாமா..? பாஜகவினுடைய பாராளுமன்ற உறுப்பினர் ஷோபா கராத்தே என்பவர் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் நடந்த குண்டு வெடிப்பிற்கு காரணம் தமிழர்கள் என்று கூறுகிறார்.

தமிழர்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று மோடியும் கண்டிக்கவில்லை. தமிழகத்திற்கு தலைவரா இருக்கும் அண்ணாமலையும் வாய் திறக்கவில்லை. உடனடியாக அவரை பதவியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும் அல்லவா..? தமிழர்கள் தீவிரவாதிகளா?

20000 சதுர கிலோ மீட்டரை சீனா ஆக்கிரமிப்பு செய்து சீன மொழியில் 30 ஊர்களுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மோடி வாய் திறக்காமல் அமைதி காக்கிறார். இலங்கை நம்முடைய நாட்டில் இடத்தை பிடித்துள்ளதா..?

2015 முன்னாள் வெளி விவகாரத்துறை செயலாளராக இருந்த ஜெய்சங்கர் கச்சத்தீவை மீட்க முடியாது. அது கொடுத்தாச்சு அதில் பல ஒப்பந்தங்கள் உள்ளது என்று பேசியவர், அரசியலுக்காக இன்று பேசுகிறார். அரசியலுக்காக பேசுகிறவர்கள் நாட்டிற்காகவும் பேச வேண்டும்.

கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்று இந்தியா கூட்டணி வெல்லும். தமிழகத்திற்கு தேவையான எல்லா நலன்களும் வளங்களும் கண்டிப்பாக வழங்கப்படும்.
நாங்கள் எந்த தேர்தல்களில் நாங்கள் பிரதமர் வேட்பாளர் யார்? என சொன்னதில்லை தேவையில்லை என தெரிவித்தார்.

Views: - 89

0

0