பாஜக பிரமுகரை கொல்ல சதி… பெட்ரோல் குண்டு வீச முயன்ற மர்மநபர் : கோவையில் பதற்றம்!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2025, 12:54 pm

கோவையில் பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதற்காக இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் குண்டுடன் சென்ற ஒருவரை காவல் துறையினர் வாகன சோதனையின் போது கைது செய்தனர்.

இதையும் படியுங்க: தவெகவில் பதவி? தற்குறி ஸ்டேட்டஸ்.. தாடி பாலாஜி விளக்கம்!

கோவை : குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நாசர். இவர் தெலுங்கு பாளையம் பகுதியில் உள்ள பா.ஜ.க ஆன்மீக அணி தலைவர் மணிகண்டன் என்பவரது வீட்டில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்ற போது செல்வபுரம் பகுதியில் வைத்து காவல் துறையினரின் சோதனையில் சிக்கினார்.

இவர் ஏற்கனவே இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி கைது செய்யப்பட்டவர். இதேபோல் நடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் வெளிவந்தால் திரையரங்கம் மீது குண்டு வீசுவேன் என மிரட்டல் விடுத்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Man Arrested in Plan to Kill BJP Executive

நாசர், மணிகண்டனுக்கு இடையே இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.இவர் மீது கோவை, சூலூர் போன்ற பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!