கோவையில் பொது சுகாதார ஆய்வகம் கட்டும் பணி : அடிக்கல் நாட்டினார் அமைச்சர் செந்தில் பாலாஜி!!

Author: Udayachandran RadhaKrishnan
26 March 2022, 10:36 am

கோவை : பீளமேடு பகுதியில் நகர பொது சுகாதார ஆய்வகம் கட்டும் பணிகளுக்காக தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று அடிக்கல் நாட்டினார்.

கோவை மாவட்டம் வார்டு எண் 26 க்குட்பட்ட, பீளமேடு, பயனீர் மில் சாலையில் தமிழக 15 வது மத்திய நிதிக்குழு திட்டத்தின் கீழ், ரூ.22 லட்சம் மதிப்பீட்டில், நகர பொது சுகாதார ஆய்வகம் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

முன்னதாக, துவக்கவிழாவில் கலந்து கொள்ள வந்த அமைச்சரை வரவேற்கும் விதமாக, 26 வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி, பொன்னாடை வழங்கி வரவேற்றார்,

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மதிமுக மாவட்ட துணை செயலாளர்,
ஆர், சற்குணம், பகுதி செயலாளர் எஸ்பி வெள்ளியங்கிரி, பொதுக்குழு உறுப்பினர் பயனீர் தியாகு என பலரும் கலந்து கொண்டனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!