நீட் தேர்வு தொடர்பான கருத்துகள் குறித்து 28ம் தேதி ஆலோசனை

23 June 2021, 11:21 pm
Quick Share

சென்னை: நீட் தாக்கம் குறித்து பெற்றப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக ஏ.கே.ராஜன் குழு வரும் 28 ம் தேதி ஆலோசனை நடத்துகிறது.

நீட் தேர்வு குறித்து தமிழக அரசு ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழுவினர் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து ஒரு மாத காலத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அரசு கூறி இருந்தது.கருத்துக்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்தது. நீட் தேர்வுக்கு ஆதரவாகவும். எதிர்ப்பு தெரிவித்தும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இக்கருத்துக்கள் குறித்து அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு வரும் 28 ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளது.

Views: - 89

0

0