கோவையில் கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம்: கேமராக்கள் மூலம் மாவட்ட எல்லைகளை கண்காணிக்க ஏற்பாடு..!!
Author: Aarthi Sivakumar11 January 2022, 12:53 pm
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இன்று நடைபெற்றது .
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் அனைத்து துறை அலுவலர்களுடன் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில், கோவை மாவட்டத்தில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளை அழைத்து கொரோனா தொற்று குறித்து, ஆய்வு மேற்கொள்ள பட்டு வருகின்றது.
மேலும் மாவட்ட எல்லைகளை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில், கேமராக்கள் அமைக்கப்பட்டு இதன் செயல்பாடுகள் இன்று துவக்கி வைக்கபட்டுள்ளது. இதன் மூலமாக யார் யார், இந்த வழிதடங்ஙளில் பயணம் மேற்கொள்கின்றார்கள் என்பதை இங்கிருந்து கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று விஷயத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை படுகின்றது. பொதுமக்கள் பலரும் ஊரடங்கை கடை பிடிக்க தவறிவிடுகின்றனர். அது தவறான ஒன்று பொதுமக்கள் அனைவரும் இந்த மூன்றாவது அலையில் பெரிய அளவில் பாதிப்படைய கூடாது என்று தான் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
எனவே பொதுமக்கள் இதனை கடைபிடிக்க வேண்டும். மேலும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கிராமங்கள் தோறும் ஒளிபரப்பாகும் சேனல்களின் மூலமாகவும், பத்திரிகையாளர்களாகிய உங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளது என அவர் கூறினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாவட்ட வருவாய் அலுவலர், காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
0