குமரி கடலில் தொடரும் கடல்சீற்றம் ; 4-வது நாளாக 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்திவைப்பு

Author: Babu Lakshmanan
9 September 2022, 2:16 pm
Quick Share

கன்னியாகுமரி ; குமரி கடலில் தொடர்ந்து கடல் சீற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், 4-வது நாளாக 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும், 200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம், மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு சுமார் 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் சுமார் 6-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 200-க்கும் மேற்பட்ட வீசைப்படகுகளில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

தற்போது தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்வதோடு குமரிக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூரைக்காற்றுடன் கடல் சீற்றமாகவே காணப்படும் எனவும், எனவே அந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் கடந்த ஒரு வாரமாக சூரைக்காற்றுடன் கடல் சீற்றமாகவே காணப்படுவதோடு கடல் பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.

இதனால், கழிந்த செவ்வாய் கிழமை முதல் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் சுமார் 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும், 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும், கடந்த மூன்று நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத வில்லை.

இந்த நிலையில், இன்றும் நான்காவது நாளாக சூரை காற்றுடன் கடல் சீற்றம் காணப்படுவதால் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட பைபர் படகு மற்றும் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாத நிலையில் தங்கள் படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

Views: - 652

0

0